உறவுகள் தொடர்கதை பாடல் வரிகள்

Movie Name
Aval Appadithan (1978) (அவள் அப்படித்தான்)
Music
Ilaiyaraaja
Year
1978
Singers
K. J. Yesudas
Lyrics
Gangai Amaran
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை 
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம் சுகமே
(இசை)

உன் நெஞ்சிலே பாரம்  உனக்காகவே நானும் 
சுமைதாங்கியாய் தாங்குவேன் 
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன் 
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் 
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் 


உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம் சுகமே 
(இசை)

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் 
நாள் ஒன்றிலும் ஆனந்தம் 
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம் 
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது 
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது 


உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை 
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம் சுகமே 
இனியெல்லாம் சுகமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.