யாரோ யார் இவன் பாடல் வரிகள்

Movie Name
Thaakka Thaakka (2015) (தாக்க தாக்க‌)
Music
Jakes Bejoy
Year
2015
Singers
Vikranth
Lyrics
Kalai Kumar
யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

தாயின் கருவிலே
தானாய் உதித்தவன்

வரமா வலியா இறைவன் சதியா
ஜனனம் எது மரணம் எது

இவை இரண்டும் ஒன்றாய் சேந்த
பிறவியோ இவன்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

எதர்க்கிவன் வந்தானோ
என்னை இனி செய்வானோ

இவனது விதியினை
யார் அறிவார்

இவன் விதி இதுவென்று
அவன் விதி அதுவென்று

படைத்தவன் அவன் விதி
அவன் படைதான்

பிறர் துயர் துடைத்திட
பிறந்தவனோ

இவன் துயர் துடைத்திட
யார் எவனோ

இறைவா இது யார் பிழையோ
அறிவாய் இது உன் பிழையே
உயிரின் வழியை உணர்வாய்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

ஓர் அறிவேன்றாலும்
ஆர் அறிவேன்றாலும்

அணைத்திட்ட பரம்பொருள்
தாய் அல்லவா

ஊர் பழி சொன்னாலும்
வீண் பழி என்றாலும்

தாயவள் அன்பினில்
களங்கமுண்டா

காலத்தின் கண்ணீரின்
வலி இவளோ

இவளது கண்ணீரின்
விலை இவனோ

இறைவா இவள் தாயில்லையா
உனக்கும் ஒரு தாயில்லையா

உயிரின் வழியை
உணர்வாய்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

தாயின் கருவிலே
தானாய் உதித்தவன்

வரமா வலியா இறைவன் சதியா
ஜனனம் எது மரணம் எது

இவை இரண்டும் ஒன்றாய் சேந்த
பிறவியோ இவன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.