கஞ்சா பூவு கண்ணால பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Viruman (2022) (விருமன்)
Music
Yuvan Shankar Raja
Year
2022
Singers
Sid Sriram, Yuvan Shankar Raja
Lyrics
Karumathur Manimaran
கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால

கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா

கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா

ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா
ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா

கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

அந்தி நடுச்சாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
ஒன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப்போறேன்….

அந்த ராத்திரியே கிள்ளி
கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி
ஒன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன்

மாடுக்குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா
என்ன செய்யுவேன்டி

சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
ஒன் சுண்டு விரல் பட்டு போன
சுணங்கி போவேன்டி

நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேன்டி
நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேன்டி

கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.