கத்தாழக் கண்ணால பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Anjathe (2008) (அஞ்சாதே)
Music
Sundar C Babu
Year
2008
Singers
Naveen Madhav
Lyrics
Kabilan
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
கூந்தல் கோர்வையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு.
கத்தாழ கண்ணால...

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவென பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க
கத்தாழ கண்ணால...

தழுதழுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்....
கத்தாழ கண்ணால...

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.