நிலவின் நிறமும் பாடல் வரிகள்

Movie Name
Adangathey (2018) (அடங்காதே)
Music
G. V. Prakash Kumar
Year
2018
Singers
Jothi
Lyrics
நிலவின் நிறமும்
வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும்
எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர்
காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி
இதயம் வெல்வேன்

நிழலின் வரவை
தடுப்பதேது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை
தொலைக்கவில்லை
என் போர்வையில்
காதலை மதிக்கவில்லை

கனவும் நினைவும் களையுமா
என் உயிரும் உணர்வும்
நிலைக்குமா
எதனை காலங்கள்
இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா

கிளையை தேடும்
பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம்
சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில்
வாழ்ந்திடுவேனோ

எதிர்த்த திசையில்
பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில்
மாற்றமில்லை
உன் நினைவு உயிரை
தேற்றவில்லை

உயிர்விடும்
இந்த நொடியிலே
உன் முகம்
கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.