யாரடி யாரடி பாடல் வரிகள்

Movie Name
Adangathey (2018) (அடங்காதே)
Music
G. V. Prakash Kumar
Year
2018
Singers
Sathyaprakash
Lyrics
Uma Devi
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே

ஒலிகள் ஆடை மூடி
வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி
தங்குதே
உயிர் பொங்குதே…

யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்

நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்

தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம்
கரைகிறதே

மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி

யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே

வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே

திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே…

உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி

யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.