புது சூரியன் என் வீட்டிலே பாடல் வரிகள்

Movie Name
Pattas (2020) (பட்டாஸ்)
Music
Vivek - Mervin
Year
2020
Singers
Anuradha Sriram
Lyrics
Uma Devi
பெண் : புது சூரியன் என் வீட்டிலே
அழகாகதான் விளையாடுதே
இரு தோளிலும் சுகம் கூடுதே
உன்னை தூக்கி நான் பசி ஆறுவேன்

பெண் : அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே

பெண் : வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே

பெண் : கடல் தாண்டி நீரும் போய் விடுமா
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா

பெண் : அனுதினம் உன்னை
நினைக்கையில் மனம்
அணு அணுவாய் துடிக்குது வா
திருமுகம் தந்து
சிறு விரல் கொண்டு
பெரு வழிகளை துடைத்திட வா
மறுபடி உன்னை மடியினில் பெற
கருவறை தவம் கிடக்குது வா

பெண் : நீயின்றி நான் வாழ
ஆரம்பம் ஏதிங்கே
நீதானே நான் வாழ
ஆதரவா அன்பே

பெண் : வான் தாண்டி சூரியனும்
தூரங்கள் போய்விடுமா
தாய் போல வாழ்வெல்லாம்
நியாங்கள் தோன்றுமா

பெண் : தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ
தலை சாய்ந்திடு ஆராரிரோ
இமை மூடிடு ஆராரிரோ

பெண் : அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே

பெண் : வா சிறந்த மொழியே
மடல்கள் திறந்த வழியே
நான் உடைந்த சிலையே
சிலையில் முளைக்கும் உயிரே

பெண் : கடல் தாண்டி நீரும் போய் விடுமா…..
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா
கடல் தாண்டி நீரும் போய் விடுமா……
கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.