ஏலோ கீச்சன் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Kadal (2013) (கடல்)
Music
A. R. Rahman
Year
2013
Singers
A. R. Rahman
Lyrics
Madhan Karky
ஏமா சீலா -நம்ம
கடலம்மா அள்ளித் தாரா
ஆமா சீலா - அவ
அலைவீசி சிரிக்குறா

ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
கட்டு மரம் கொண்டா லே!
குண்டு மீன அள்ளி வரக் கொண்டா லே!

ஏளா! பாய் விரிச்சா... அய்யோ
வாவல் வாசந் தேடி
வாரான் கீச்சான் - ஒங் கீச்சான்
ராவோட கூவை கிட்ட கண்ண கேப்பான்
றாலோட றாலோட மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
புலிவேசம் போட்டு வருவான் கீச்சான்

ஹே... சடசட சடவென காத்துல ஆடும்
என் சாரம் ஏளா ஒம் பேர பாடாதா?
ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர

ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நான் அரக் கிறுக்கேன்
நீ வேணா சொன்னா
எங்க எங்க போவானோ தோமா?

ஒத்த அலையில மெதக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?

நீ திடுதிடுக்க - என்ன
சுத்தி வளைக்க - நான்
வெலவெலக்க - தல
கிறு கிறுக்க

நீ பாத்த நொடியே - ஹே
பித்துப் பிடிக்க - என்
தூத்துக்குடியே ஒன்ன
தூக்கி இழுக்க! தூக்கி இழுக்க!

ஏ இத்தன மச்சம் - ஹே
எத்தன லட்சம் - அத
எண்ணி முடிச்சே - நாம
தூக்கம் தொலச்சோம்

ஏ ஒத்த பிடியா - நீ
மொத்தம் கொடுத்த - என்
அன்ன மடியா - என்ன
வாரி எடுத்த! வாரி எடுத்த!

ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
ஏலம் போடக் கொண்டாலே!
போகும் மேகம் மீனத் தூவும் கொண்டா லே!
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.