Lyrics
Edharkaga Marubadi Lyrics
எதற்காக மறுபடி இருவிழியில் விழுந்து வழிந்தாள்?
எதற்காக மறுபடி அவளை மறந்த மனதை கடந்தாள்?
அழையா அந்நாள் இதா? அவளால் புண்ணானதா?
இதழும் இருளும் கலந்து உயிரில் விழுதா?
சிரிக்க மறந்த இரண்டு இதழும் பழுதா?
அமைதி அடைந்த கடலில் புயலும் வருதா?
அவளின் நினைவு வழியில் படைத்த விருதா?
தேளாக நான், நாள் மாறுமா?
நீ கேட்ட புன்னகை உன்னோடு போனதே
நான் கோர்த்த மின்னலை களவாடி போனதே
கண்ணாடி ஒன்று தான் சிரிப்போடு பார்க்குதே
நகை ஆடி தீர்க்குதே
தேளாக நான், நாள் மாறுதே
காதல் நதியில் ஓர் அலையென ஆடி மகிழ்ந்தேன்
ஞானக் கரையில் வந்தெழுந்தவன், ஈரம் தொலைத்துவிட்டேன்
விலகினேன் என் தடாகமே, என் கலாபமே, என் விவாதமே
உன் விலாசமே வதைவதே
நான் இன்று இல்லையே, முகமூடி தான் இது
நீ பார்த்த பால் நதி, நீர் வீழ்ச்சியாய் ஆனதே

People
Related People
5 people