உயிரின் உயிரே பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Kaaka Kaaka (2003) (காக்க காக்க )
Music
Harris Jayaraj
Year
2003
Singers
KK, Suchitra
Lyrics
Thamarai
உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்


சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ
நீ
நீ

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…
பின்பு ஏனோ சென்றாய்
ஏனோ சென்றாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.