முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Vaaranam Aayiram (2008) (வாரணம் ஆயிரம்)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Thamarai
Lyrics
Thamarai
ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..

ஆண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)

(இசை...)

ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே..

பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...

பெண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே...

(இசை...)

பெண்: கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே

ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...

பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...)

ஆண்: வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா.
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.