அனல் மேலே பனித்துளி பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Vaaranam Aayiram (2008) (வாரணம் ஆயிரம்)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Thamarai
Lyrics
Thamarai
பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(இசை...)

பெண்: எந்தக்காற்றின் அளாவலில்
மலரிதழ்கள் விரிந்திடுமோ
எந்தன் தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)

(இசை...)

பெண்: சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.