வாங்கம்மா வாங்கப்பா பாடல் வரிகள்

Movie Name
Vanavarayan Vallavarayan (2014) (வானவராயன் வல்லவராயன் )
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Priya Himesh, Ranjith, Sathyan
Lyrics
Snehan
ஏ வாங்கம்மா வாங்கப்பா வாங்கத்தே வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணே வாமாமா வாமச்சான்
பெரியம்மா பெரியப்பா சின்னம்மா சித்தப்பா
அங்காளி பங்காளி அம்மாச்சி அப்பாயி
தாத்தாக்கள் எல்லோரும் ஒன்னாக சேந்து தான்
வாழ்த்த வாங்க வாழ்த்த வாங்க
மாப்பிள்ளை வீட்டாரும் பொண்ணோட வீட்டாரும்
நாங்க நாங்க வாங்க வாங்க

அட பொண்ணுக்கு ஆசையும் ஆணுக்கு மீசையும்
மொளைச்சாலே கல்யாணம் கச்சேரி ஆரம்பம்
குலம் பார்த்து குணம் பார்த்து குலசாமி குறி பார்த்து
பதினாறு பொருத்தங்கள் பிசகாமல் சரிபார்த்து
நாம் சேர்த்து வச்சாலும் மனசால சேர்ந்தாத்தான் சந்தோசங்க மறக்காதீங்க
தாலியே வேலியா மாறிட கூடாது வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க

மனம்போல லவ் பண்ணு தினந்தோறும் லவ் பண்ணு
ஆனாலும் ஒருத்திக்கு தாலி கட்டு
நீ நாயாட்டம் அலைஞ்சாலும் பேயாட்டம் அலைஞ்சாலும்
அழகான பொண்ண நீ Follow பண்ணு
ஏ பாத்ததும் சிரிக்கின்ற பொண்ண நீ பார்த்திட்டா
பட்டுன்னு ஓகே தான் பண்ணிடாதே
அதுக்குன்னு அமைதியா இருக்கின்ற பொண்ணெல்லாம்
உயர்வான பொண்ணுன்னு என்னிடாதே
ஹே தேவதை ராட்சஸி ரெண்டுமே ஒண்ணுதான்

வாங்கம்மா வாங்கப்பா வாங்கத்தே வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணே வாமாமா வாமச்சான்

எல்லோரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுங்க
கல்யாண செலவெல்லாம் மிச்சமாகும்
மாமனா காசுனா உடம்பைத்தான் வளர்க்கின்ற
ஊதாரி கும்பல்கள் குறைஞ்சே போகும்
யாருக்கு யாருன்னு விதிஎல்லாம் கிடையாது
காதல்ல மட்டுமே நம்புங்கடா
ஹே ஆணுக்கு பெண் வேணும் பெண்ணுக்கு ஆண் வேணும்
காதலில் வேறொன்றும் வேண்டாமடா
கட்டுனா மனைவியும் காதலி தானடா

பொண்ணுக்கு ஆசையும் ஆணுக்கு மீசையும்
மொளைச்சாலே கல்யாணம் கச்சேரி ஆரம்பம்
குலம் பார்த்து குணம் பார்த்து குலசாமி குறி பார்த்து
பதினாறு பொருத்தங்கள் பிசகாமல் சரிபார்த்து
நாம் சேர்த்து வச்சாலும் மனசால சேர்ந்தாத்தான் சந்தோசங்க மறக்காதீங்க
தாலியே வேலியா மாறிட கூடாது வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.