Chapter 50

இடனறிதல்

Itanaridhal

Knowing the Place

10 kurals

Kural 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
No action take, no foe despise Until you have surveyed the place
Kural 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
Many are gains of fortresses Ev'n to kings of power and prowess
Kural 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
Weaklings too withstand foe's offence In proper fields of strong defence
Kural 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
If fighters fight in vantage field The plans of foes shall be baffled
Kural 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
In water crocodile prevails In land before others it fails
Kural 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car
Kural 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
No aid but daring dash they need When field is chosen right for deed
Kural 498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
Though force is small, if place is right One quells a foe of well-armed might
Kural 499 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
To face a foe at home is vain Though fort and status are not fine
Kural 500 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire