Chapter 57

வெருவந்த செய்யாமை

Veruvandhaseyyaamai

Absence of Terrorism

10 kurals

Kural 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
A king enquires and gives sentence Just to prevent future offence
Kural 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway
Kural 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed
Kural 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
As men the king a tyrant call His days dwindled, hasten his fall
Kural 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul
Kural 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade
Kural 567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
Reproofs rough and punishments rude Like files conquering power corrode
Kural 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
The king who would not take counsels Rages with wrath-his fortune fails
Kural 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
The king who builds not fort betimes Fears his foes in wars and dies
Kural 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth