Chapter 58

கண்ணோட்டம்

Kannottam

Benignity

10 kurals

Kural 571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
Living in the world implies The bounteous dame of benign eyes
Kural 572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
World lives by looks of lovely worth Who lack them are burdens of earth
Kural 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
Of tuneless song what is the use? Without gracious looks what are eyes?
Kural 574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
Except that they are on the face What for are eyes sans measured grace
Kural 575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore
Kural 576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
Like trees on inert earth they grow Who don't eye to eye kindness show
Kural 577 கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
Ungracious men lack real eyes Men of real eyes show benign grace
Kural 578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
Who gracious are but dutiful Have right for this earth beautiful
Kural 579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
To be benign and bear with foes Who vex us is true virtue's phase
Kural 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
Men of graceful courtesy Take hemlock and look cheerfully