எஞ்சாமி தண்டானே பாடல் வரிகள்

Last Updated: Sep 02, 2025

Movie Name
Idly Kadai (2025) (இட்லி கடை)
Music
G. V. Prakash Kumar
Year
2025
Singers
Arivu, Dhanush
Lyrics
Dhanush
நட்டு வெச்ச நாத்தை எல்லாம்
உத்து உத்து பாக்குதும்மா
கட்டி வெச்ச காள மாடு…..மூ…மூ…

பச்சரிசி பொங்க வெச்சு
பக்குவமா கொழம்பு வெச்சு
கூப்பிடுது சொந்த ஊர்

என்ஜாமி தந்தானே
எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே
எல்லாமே ஒனக்கும் தந்தானே

ஏ என்ஜாமி தந்தானே
எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே
காத்தாற தின்னையும் தந்தானே

நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு
சொன்னது யாருன்னு கூறு புள்ள
சாமிக்கு நீ வேறு நான் வேறில்லை
பூமிக்கு யாருமே பாரமில்லை

ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான்
வெளைய வச்சானே

ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான்
வெளைய வச்சானே

ஏ ஹே என்ஜாமி தந்தானே
எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே
எல்லாமே ஒனக்கும் தந்தானே

ஏ என்ஜாமி தந்தானே
எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே
காத்தாற தின்னையும் தந்தானே

எட்டூர்ரு எட்டூர்ரு கொட்டும் மோளம்
அப்பாரும் முப்பாரும் கொண்ட வனம்
எட்டூர் எட்டூர் கொட்டும் மொழி
அப்பாரும் முப்பாரும் கொண்ட வனம்

நட்டு வெச்ச நாத்தை எல்லாம்
உத்து உத்து பாக்குதும்மா
கட்டி வெச்ச காள மாடு….மூ…மூ…

பச்சரிசி பொங்க வெச்சு
பக்குவமா கொழம்பு வெச்சு
கூப்பிடுது சொந்த ஊர்….ஊ….ஊ….

ஏ கள்ளம் கபடம் இல்லா
நெஞ்சு இருக்கு
என் கண்ணுக்குட்டிக்கும்
சோறு தண்ணி பங்கு இருக்கு

யே தன்னந்தனியா
ஏங்க என்ன இருக்கு
என் சொந்த பந்தமா
ஊரே இங்கு இருக்கு

தாரை தப்பட்ட தட்டுங்கடி
நம்மூர் கும்மிய கொட்டுங்கடி
மஞ்ச குங்குமம் பூசிகிட்டு
மல்லி பூவோடு சுத்துங்கடி

நான் சொல்லுற சங்கதிய கேட்டுகைய்யா
உன் காதுல வாங்கி நீ போட்டுகைய்யா
சொந்த மண்ணையும் பெண்ணையும் கும்பிடனும்
நம்ம பாட்டனும் பூட்டானும் சொன்னதைய்யா

என்ஜாமி ஏ என்ஜாமி
எது வந்தாலும் போனாலும்
இந்த மண் தானே என்ஜாமி….


ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான்
வெளைய வச்சானே


ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான்
வெளைய வச்சானே


ஏ என்ஜாமி தந்தானே
எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே
எல்லாமே ஒனக்கும் தந்தானே


ஏ என்ஜாமி தந்தானே
எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே
காத்தாற தின்னையும் தந்தானே


நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு
சொன்னது யாருன்னு கூறு புள்ள
சாமிக்கு நீ வேறு நான் வேறில்லை
பூமிக்கு யாருமே பாரமில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.