உலகம் எல்லாம் காதல் விழா பாடல் வரிகள்

Movie Name
Kanne Kaniyamuthe (1986) (கண்ணே கனியமுதே)
Music
M. S. Viswanathan
Year
1986
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Kannan

தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்

தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமி தோம்தோம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்

தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
மடி மீது தலை சாய்த்து
முகம் மீது முகம் பார்த்து நம்மை மறப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
புது ராகம் உருவாக
இதழோடு இதழ் சேர்த்து இசை அமைப்போம்

தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
மணமாலை வரும் நாளை
திருநாளை விழி தேட இமை திறப்போம்
கனவாய் பறப்போம்
புதிதாய் பிறப்போம்
கனவாய் பறப்போம்
புதிதாய் பிறப்போம்

தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்

இவள் காதோரம் கதை பேசும் காற்று
நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
இவள் காதோரம் கதை பேசும் காற்று
நீ நான் வீச வளைந்தாடும் நாற்று

மனம் தேவாலயம்
அதில் நீ கோபுரம்
இருவரும் : இங்கு தாளங்கள் ராகங்கள் பூத்தூவுமே

இருவரும் : உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.