Pookkale Vanna Vanna Lyrics
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் பாடல் வரிகள்
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்
எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவரும் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி
அது சிந்தும் இங்கே வெள்ளியருவி
மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி
அது சிந்தும் இங்கே வெள்ளியருவி
தேரேறி வந்த நிலா சிறை
நெஞ்சினிலா என்று தெரிவி
தேரேறி வந்த நிலா சிறை
நெஞ்சினிலா என்று தெரிவி
ஒளிரும் சிலையோ...
உலகம் விலையோ
உடல் காமன் கலையோ
எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
முத்தமிட செண்பகப்பூ அழைக்கும் ஹே ஹே ஹே
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்
ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று
இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்
ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று
இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்
ராஜாத்தி தந்த முகம் அதன்
சொந்தமென்று சிந்து படித்தேன்
ராஜாத்தி தந்த முகம் அதன்
சொந்தமென்று சிந்து படித்தேன்
கனிதான் நகையோ....
இலைகள் உடையோ
இடை தேனின் கடையோ
எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவரும் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்
எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவரும் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.