ஒரு பிள்ளை அழைத்தது என்னை பாடல் வரிகள்

Movie Name
Kanne Kaniyamuthe (1986) (கண்ணே கனியமுதே)
Music
M. S. Viswanathan
Year
1986
Singers
Vani Jayaram
Lyrics
Kannan

கண்ணா...ஆஆஆஆ...ஆஆஆஆ...
கண்ணா...ஆஆஆஆ...ஆஆஆஆ...

ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை

ஏழை என்றாலும் எங்கிருந்தாலும்
என் கானம் தாலாட்டும் உன்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை...

ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும்
என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும்
ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும்
என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும்

மலர் தந்ததாலே மரமாகி போனேன்
மண்ணுக்கும் பாரமாய் ஆனேன்
மடி உண்டு பிள்ளையை காணேன்
பெற்ற மலடியாய் போனது நானே
கண்ணே.......கனியமுதே......

ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை

தாய் மொழி இல்லாமல் பட்டம் வரும்
உன்னை பாராட்ட கோடியாய் சுற்றம் வரும்
உதிரத்தின் கீதம் ஒரு ஜீவன் பாடும்
உள்ளத்தில் காவேரி ஓடும்
உலகத்தின் எல்லைகள் தேடும்
என்றும் ஊமையாய் தாய் குயில் வாடும்
கண்ணே.......கனியமுதே......

ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.