நிலா நிலா ஓடிவா பாடல் வரிகள்

Movie Name
Sangu Pushpangal (1989) (சங்கு புஸ்பங்கள்)
Music
Guna Singh
Year
1989
Singers
K. J. Jesudass
Lyrics
Anbu Kani
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

கண்ணுக்கு மை தீட்டி ஓடி வா
கல்யாண இசைப் பாடி ஆடி வா
கண்ணீரில் வெண்ணிலவு ஏங்கினால்
கண்ணே என் இள நெஞ்சம் தாங்குமா

நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு
தத்தளிக்கும் தாமரைப்பூ
நினைவே தூங்காமலே விழியில் நீர் தேங்குமே
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா
அத்தானின் விழியோரம் நீந்த வா
ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ
எந்நாளும் விலகாத பந்தமோ

நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு
தத்தளிக்கும் தாமரைப்பூ
மலரே மயங்காமலே மயிலே பறந்தோடி வா
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா
நிலா நிலா ஓடிவா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.