சோலை குயில் பாடுதே பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Sangu Pushpangal (1989) (சங்கு புஸ்பங்கள்)
Music
Guna Singh
Year
1989
Singers
K. J. Jesudass
Lyrics
Anbu Kani
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே
பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட
பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்
இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

என் மனதை அவளிடமே
சொல்லுங்களேன் ஓ மேகங்களே
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்
காதலில் நான் வாடினேன்
காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்
காதலில் நான் வாடினேன்

தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும்
காதலி உனக்காக காவியம் நான் பாட
விழியில் விளையாடும் எழிலான பூவே
இதயத்தையே பிழிந்திடுவேன்
வேதங்களே உன் பாதங்களே....
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

என்னை சிறை செய்த உனக்காகத்தானே
உயிரில் ஸ்வரம் தேடினேன்
என்னை சிறை செய்த உனக்காகத்தானே
உயிரில் ஸ்வரம் தேடினேன்

காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது
பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும்
நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே
பெண் மனமே விழித்திடவே
பாடிடுவேன் பூபாளங்களே..

சோலை குயில் பாடுதே சோக ராகங்களே
பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட
பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்
இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

என் மனதை அவளிடமே
சொல்லுங்களேன் ஓ மேகங்களே
சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.