கண்ணுக்குள் தீபம் ஏந்தி பாடல் வரிகள்

Movie Name
Sangu Pushpangal (1989) (சங்கு புஸ்பங்கள்)
Music
Guna Singh
Year
1989
Singers
K. J. Jesudass, K. S. Chitra
Lyrics
Anbu Kani
ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
இருவரும் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே
இளமை தவழும் அழகு பெண்ணோவியம்
ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ
பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட
என் தேகம் சூடேறும் இளம்
கண்ணோரம் தேனூறும்

ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே
இளமை விளையாடும் பருவங்களே
பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே
வாசம் வீசும் மலர்களே...

ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
இருவரும் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

பெண் : செந்தூரம் சிந்தாமலே
இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம்
பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ
ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி
உயிரோடு உயிர் சேரும்
என்றும் எழுதாத கதை பேசும்

பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே
இன்று உன் நெஞ்சே சிறையாகுமே
ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது
காதல் பேசும் உயிர்களே...

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி
கண்மணியே ஓடி வா
ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம்
என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
இருவரும் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.