நிலா நிலா ஓடிவா பாடல் வரிகள்

Movie Name
Sangu Pushpangal (1989) (சங்கு புஸ்பங்கள்)
Music
Guna Singh
Year
1989
Singers
Vani Jayaram
Lyrics
Anbu Kani
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா

தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

கங்கையிலே குளிரெடுத்து ஓடி வா
கை வீசிக் கதைப் பேசிப் பாடி வா
மங்கையிவள் மன்னவன் தூங்கவே
மாலை வரும் தென்றலையே வாங்கி வா

கண்ணிரெண்டும் தாமரைப்பூ
கையிரண்டும் ரோஜாப்பூ
விழியே மொழிப் பேசுமோ உயிரே உனக்காகவே
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா
ஆத்தோரம் அலை மீது நீந்தி வா
ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ
எந்நாளும் விலகாத பந்தமோ

பூவுக்குள்ளே பூந்தோப்பு புன்சிரிப்பு மத்தாப்பு
மயிலே தாயாகவே மலரே மடி மீது வா
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா
நிலா நிலா ஓடிவா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.