மாசிலா நிலவே பாடல் வரிகள்

Movie Name
Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
Music
G. Ramanathan
Year
1957
Singers
P. Bhanumathi, T. M. Soundararajan
Lyrics
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே கண்ணே 
மாநிலம் கொண்டாடுதே

பேசவும் அரிதான பிரேமையின் சிரம் கண்டு
பேசவும் அரிதான பிரேமையின் சிரம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே 

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே 

சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
தீபமாய் ஒளி வீசுதே கண்ணே 
தீபமாய் ஒளி வீசுதே 

மாருதம் தனிலாடும் மாந்தளிர் கரம் நீட்டி
மாருதம் தனிலாடும் மாந்தளிர் கரம் நீட்டி
மௌனமாய் நமை வாட்டுதே கண்ணா
மௌனமாய் நமை வாட்டுதே 

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
இருவர் மாநிலம் கொண்டாடுதே 

கண்ணா

இருவர் மாநிலம் கொண்டாடுதே 

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

இருவர் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


அன்பே

இன்பம்

எங்கே

இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்

நீரோடு நீர் போல நாம் கூடுவோம்
அன்பே

இன்பம்

எங்கே

இங்கே

இருவர் மாறாத பேரின்ப நீராடுவோம் 

நீந்தும் அலையின் மீது நிலவின்
தண்ணொளி விளையாடுதே 

தேன் துளிகளை ஏந்து மலரும்
தென்றலும் உறவாடுதே 

உந்தன் மீன் விழிகளை காணும் நதியின்
மீன்களும் துள்ளி ஆடுதே
மீன் விழிகளை காணும் நதியின்
மீன்களும் துள்ளி ஆடுதே

ஆணெழில் முகம் வான் மதியென
அல்லியும் உமை நாடுதே
ஆணெழில் முகம் வான் மதியென
அல்லியும் உமை நாடுதே

அன்பே

இன்பம்

எங்கே

இங்கே

இருவர் மாறாத பேரின்ப நீராடுவோம்

வானம் இங்கே பூமி எங்கே
வாழ்வு தாழ்வெங்கே
காணும் யாவும் காதலன்றி
வேறு ஏதிங்கே 

வேணு கானம் தென்றலோடு 
சேர்ந்த பின்னாலே
வேணு கானம் தென்றலோடு 
சேர்ந்த பின்னாலே

கானம் வேறு காற்று வேறாய்
கேட்பதே இல்லை
கானம் வேறு காற்று வேறாய்
கேட்பதே இல்லை

இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை

இருவர் இனி நானும் வேறில்லை
இனி நானும் வேறில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.