சோறு மணக்கும் பாடல் வரிகள்

Movie Name
Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
Music
G. Ramanathan
Year
1957
Singers
V. N. Sundaram
Lyrics
சோறு மணக்கும் சோ நாடா
சோலி மணக்க புகழ் மணக்கப் பொன்னியனும்
ஆறு மணக்கும் புனல் நாடா
ஆட்சி மணக்க அருள் மணக்கும்
ஈழமதில் சீவி மணக்கும் குலோத்துங்கா...
வெற்றி மணக்க வீரம் மணக்க
புவனியெல்லாம் பேறு மணக்க பிறந்தாய் நீ
பேரறிஞர் போற்றி மணக்க 
வாழியவே... வாழியவே...

வரும் பகைவர் படை கண்டு
மார் தட்டிக் களம் புகும்
மக்களைப் பெற்றோர் வாழ்க... ஆ... 
மணம் கொண்ட துணைவர்க்கு
விடை தந்து வேல் தந்த
மறக் குலப் பெண்கள் வாழ்க...
உரங்கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறம் காத்த உள்ளம் வாழ்க...
திரமான புகழ் கொண்ட திடமான தோள்களும்
செயல் வீரர் மரபும் வாழ்க... 
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
அம்புலியைக் குழம்பாக்கி
அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து...
இன்ப நிறை முகமாக்கி...
கயலிரண்டை கண்ணாக்கி...
மன்னன் ஈந்த பைங்கிளியே பைங்கிளியே...
அயலொருவர் கண் படுமோ என்றஞ்சி
அயலொருவர் கண் படுமோ என்றஞ்சி
பயத்தோடுன்னை கங்கிலிலே காண்பதல்லால்
கணப் பொழுதும் இணை பிரியா...
காலம் என்றோ... ஓ... ஓ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.