யார் என்ன சொன்னாலும் பாடல் வரிகள்

Movie Name
Aambala (2015) (ஆம்பள)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Kutle Khan, Anthony Dassan, Varun Parandhaman
Lyrics
Hiphop Tamizha
யார்
அன்பே அன்பே ராதே

பூமியில ஓஹ் ஹோ தேவதைகள் தேவதைகள்

உங்கள் புன்னகையால்
மனம் வீசிருங்கள் வீசிருங்கள்

வானத்தில லட்சம் மின்மினிகள்
ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள்

மழ சிந்தும் தென் துளியில்
அட இல்லாத சுவை தான்

உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கைக்கொரு விடை தான்

உண்மைகள் எங்கே உண்மைகள் எங்கே
பொய்களுக்குள்ளே பொய்களுக்குள்ளே
நன்மைகள் எங்கே இமைகளுல்லே

யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்

நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்

சொந்தமும் பந்தமும்
பேரு சொல்லும்

இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி

இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி

சுற்றமும் முற்றமும்
யாருமே இன்றி

வாழ்ந்திடும் வீட்டினில்
தெய்வம் இல்லை

பாசங்கள் நேசங்கள்
ஏதுமே இன்றி

வாழ்ந்திடும் வாழ்க்கையோ
வாழ்க்கையில்லை

பிரிந்தே நாம்
வாழ்ந்திடும் போதிலும்

நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே

அழகாய் பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்திடுமே

இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட

இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை

யாரென்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்

நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பெரு சொல்லும்

துன்பங்கள் துயரங்கள்
யார் தந்த போதிலும்

இன்பங்கள் மட்டும்
நாம் சேர்த்து வைப்போம்

தெய்வங்களாய் நீங்கள்
வாழ்கின்ற வீட்டினில்

தேவர்களாய் நாங்கள்
காத்து நிப்போம்

மண்ணில் சிறு பறவை
வாழ்ந்திட

மரம் தான்
இடம் கொடுத்திடும்

மரம் தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழித்திடும்

இன்னோர் ஒரு உலகில்
நான் வாழ்ந்தாலும் கூட

இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்டு

யார் என்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்

சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்

நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பெரு சொல்லும்

இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி

இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.