Ambuli Maamaa Shokku Paarka Lyrics
அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kudumbam (1954) (குடும்பம்)
Music
Pendyala Nageswara Rao
Year
1954
Singers
A. M. Rajah, Jikki
Lyrics
M. S. Subramaniam
அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க
அழகான ஆத்தங்கரைக்கு போலாமா
சேர்ந்து போலாமா மச்சான் போலாமா
அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க
கண்ணில் நீ மையும் பூசி
கால் கெஜ்ஜை குலுங்க வந்து
வா என்றால் வரவே மாட்டேனே
ஓ...ஒய்யாரப் பெண்ணே...
சரசமாடவே வரவே மாட்டேனே...
சந்திரனின் அந்த மதுவும்
மல்லியின் அந்த மதுவும்
யாருக்காகவோ என் ஆசை மச்சான்
காதலறியா வாலிபம் ஏதுக்கடா
அல்லிப் பூவும் வெண்ணிலாவும்
அன்பு போங்க தழுவும் போது
மேகமிடையில் வருவதேனோ சொல்
ஓ..சிங்காரப் பெண்ணே – அனம்
இடையில் அத்தை வருவதேனோ சொல்
காத்து வீசிட ஓடிப்போகும்
மேகத்தின் கதை என் மச்சான்
மனசும் மனசும் கலந்து போனால்
அத்தை பேச்சும் ஏன் மச்சான்
ஓ,,,என் ஆசை மச்சான்
காதலறியா வாலிபம் ஏதுக்கடா
போலாமா சேர்ந்து போலாமா......