ஏ குட்டி என்னை கல்யாணம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Kudumbam (1954) (குடும்பம்)
Music
Pendyala Nageswara Rao
Year
1954
Singers
Narayan Nagendra Rao, P. Susheela
Lyrics
M. S. Subramaniam
ஏ குட்டி! என்னைக் கண்ணாலம் பண்ணிக்கோ!
ஏ குட்டி! என்னைக் கண்ணாலம் பண்ணிக்கோ!
உனக்கென்னா வேணும் கேட்டு வாங்கிக்கோ!
உனக்கென்னா வேணும் கேட்டு வாங்கிக்கோ!
நோட்டு பவுனு தரேன் பட்டுப் பொடவை தாரேன்
என்னைக் கண்ணாலம் பண்ணிக்கோ!

ஆமா! உனைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
இப்போ உனைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
ஒண்ணுமில்லாமப் போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
ஒண்ணுமில்லாமப் போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
உனைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
உனைத்தான் நான் கட்டிக்கிட வேணும்

அடி பொன்னே பூவே பூவின் மணமே
நம்ம போலாம் ஏரோபிளேனிலே தினமே
என்னை ஏமாத்தாதே இதெல்லாம் ஆக்கிடு
உன்னை எனக்குத் தெரியும் நீ எம்ப்ட்டி பாக்கட்டு

இல்லே! வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்!
வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்!
ஆமா வாயிப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்!
வாயிப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்!
அப்படியில்லே!
எஜமான் வீட்டு வளப்புக் குட்டி-இது
எது வேண்ணாலும் குடுக்கும்
ஆமா! எஜமான் வீட்டு இலை விழலேன்னா
எங்கும் சுத்திப் படுக்கும்
ஆ! சொன்னாக் கேளு இன்னைக்கு
என்னைத் தூங்க விடாது ஆசை!
நீ சும்மா ஏன் தொணதொணன்னு பேசுறே?
சுடாமல் வராது தோசை
அட! ஓ! அப்படியா!-இப்பத்தான்
அறிஞ்சுக்கிட்டேன் புரிஞ்சிக்கிட்டேன்
ஆசை இருக்குது தெரிஞ்சிக்கிட்டேன்!