Azhuthu Azhuthu Sorndha Lyrics
அழுது அழுது சோர்ந்ததையோ பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kudumbam (1954) (குடும்பம்)
Music
Pendyala Nageswara Rao
Year
1954
Singers
P. Leela
Lyrics
M. S. Subramaniam
அழுது அழுது சோர்ந்ததையோ பாப்பா
அழ இயலாது கண்ணும் மூடினதோ பாப்பா
தாழவே இயலாத கொடும் பசியாலே
வழியே இல்லையா வாழ வழியே இல்லையா
இளம் சேயினின் கொடும் பசி தீர
வழியே இல்லையா வாழ வழியே இல்லையா..
பூணவே தங்கமும் நகை கேட்டாரா
வாழ்ந்திட மாளிகை ஏதும் கேட்டாரா
தீராப் பசிப்பிணி தீரக் கஞ்சியே போதுமென்றாலும்
வழியே இல்லையா வாழ வழியே இல்லையா..
கொடிய பசியினால் ஏங்கும் பிள்ளைக்கு
கதைகள் சொல்லினும் நித்திரை போகுமா
பாலுக்கு பதில் என் கண்ணீர் தந்தால்
கொடும் பசி தீர்ந்திடுமா.......(வழியே இல்லையா)