பார்த்தீரா இவர் சரசம் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Kudumbam (1954) (குடும்பம்)
Music
Pendyala Nageswara Rao
Year
1954
Singers
Ghantasala, P. Leela
Lyrics
M. S. Subramaniam

பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
பொன் வண்டுகளே நீர்.........(பார்த்தீரா)

ஓ.......பொன் வண்டுகளா....
மழையாலே நீ நனைந்தாயென
தலை மீதினில் துடைப்பது போல்
மடி மீதினில் எடுத்தே
என்னுள்ளம் கொள்ளை கொண்டார்..(பார்த்தீரா)

ஓ.......பொன் வண்டுகளா....
கோவில்தனில் வந்தென் தன்
மடிமீதவள் தலை வைக்க
பூமணமதினாலே ஆசை பொங்கி நானும் இன்பமுற
தப்பியவள்தான் வந்து தப்பெனதே என்றாளே
பார்த்தீரா இவள் சரசம்.....

ஓ.......பொன் வண்டுகளா...
அந்தமிகும் சுந்தரி நீ அன்பாகவே வாழ்வோமினி
நீயே என் ராணி என ஆசை மொழி சொன்னாரே
பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவள் ஹாஸ்யம்