​ஏதோ மாயம் பாடல் வரிகள்

Movie Name
Dagaalty (2020) (டகால்டி)
Music
Vijay Narain
Year
2020
Singers
Thee
Lyrics
ஏதோ மாயம்
என்ன தொடுதே
ஏக்கம் லேசா
சுத்தி விடுதே

வளையும் நெடுஞ்சாலையும்
புதிர் போட
விடையே இல்ல குடுக்க
கரையும் மணி காலமும்
நொடி போல
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே
ஆச்சுது என் மனசு

ஏதோ மாயம்
என்ன தொடுதே

கள்ள சிரிப்புல கெறங்குறனே
சின்ன கோவத்த ரசிக்குறனே
படங்காட்டும் என்னோட கனவுல
தடு மாற்றம் என்ன

வந்த நோக்கத்த மறக்குறனே
மனகூட்டுல சறுக்குறனே
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா
போராட்டம் என்ன

தனியே வருஷம்
பல கடந்தேனே நான்
துணைக்குன்னு ஒரு தேவை வல்லையே
கனவ நினைச்சே
கிறுக்கா அலைஞ்சேன்
வானமே நீ காத்துல
பறக்க தயங்குறனே

உன் கதை என்ன தெரியலையே
உன் பேச்சும் புரியலையே
உன் வழி எது கேக்கலையே
இருந்தும் புடிக்குதே

கள்ள சிரிப்புல கெறங்குறனே
சின்ன கோவத்த ரசிக்குறனே
படங்காட்டும் என்னோட கனவுல
தடுமாற்றம் என்ன

வந்த நோக்கத்த மறக்குறனே
மனகூட்டுல சறுக்குறனே
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா
போராட்டம் என்ன

ஏதோ மாயம்
என்ன தொடுதே
ஏக்கம் லேசா
சுத்தி விடுதே

வளையும் நெடுஞ்சாலையும்
புதிர் போட
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே
ஆச்சுது என் மனசு

ஏதோ மாயம்
என்ன தொடுதே….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.