பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பாடல் வரிகள்

Movie Name
Kavalan (2011) (காவலன்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Kabilan, Rita
Lyrics
Kabilan
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

யானை தந்தத்தின் சிலை நீயே
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வளை நீயே
எனைக்கட்டி இழுக்காதே

எதைத்தருவது நான் என்று
எதைப்பெறுவது தான் என்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல
இதயம் குதித்தோட

தலை அசைக்கிது உன் கண்கள்
தவித்தவிக்கிது என் நெஞ்சம்
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாகும்

பூ முகம் உன் பூ முகம்
அது முடியாத முதல் பாதம்

பெண் கவிதை இவள்தானே
பொன் இதழால் படிப்பாயோ
கண் இணைப்போடு காதல் திறப்பாயோ

அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும்பொழுது
உலகை மறந்தேனே

உனதருகினில் நான் இருக்க
உயர் குளத்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க
புதிதாய் பிறந்தேனே

மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே

மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண் நிலவோ தொடும் தூரம்
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.