Song lyrics

Ayyayo Ammaadi Lyrics

அய்யயோ அம்மாடி பாடல் வரிகள்

Last updated Sep 23, 2026

Music
Thaman S
Year
2026
Singers
Yuvan Shankar Raja, Sanjana Kalmanje
Lyricist
Vivek

Lyrics

Ayyayo Ammaadi Lyrics

நீதாண்டி நீரூறி, நெஞ்சத் தொட்ட ஒய்யாரி
நீர் மேகம் போட வந்த தூறல் நீதாண்டி
நான் போறேன் முன்னாடி, நம்பிக்கையே நீதாண்டி
நீ பாத்த நாள்முதலா நின்னேன் கொண்டாடி

திடுக்குன்னு என்னடி என்னடி இப்படி இப்படி
மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற கண்ணுடி கண்ணுடி
உனக்கும்
கொடுக்கிற அன்புள்ள அன்புள்ள கைப்புடி கைப்புடி
கிடைக்கும்
இனிக்கிற இத்தனை இத்தனை பொன்னோடி எங்கடி இருக்கும்

வாசம் ஏன் ஏறுது
வானம் ஏன் மாறுது
போகத் துணையா வந்தாலே
நடுங்குற
காத்தும் சூடாகுது
காயம் பூவாகுது
நாளா அழகா செஞ்சாளே

அய்யயோ அம்மாடி, அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி, நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னாடி

கதை கதையா பேசி என்ன
கரைய விட்டானே
அலை அலையா வீசி என்ன
மறைய விட்டானே
மழை மழையா பாத்து
என்ன நிறைய விட்டானே
மறுதலிச்சும் மீறி
இந்த மனசைத் தொட்டானே

திடுக்குன்னு எப்படி எப்படி இப்படி இப்படி
மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற கண்ணாடி வைக்கிற
எனக்கும்

ஏய்... கொடுக்கிற அன்புள்ள அன்புள்ள கைப்புடி கைப்புடி
கிடைக்கும்
இனிக்கிற இத்தனை இத்தனை பொன்னோடி இப்படி இருக்கும்

வாசம் ஏன் ஏறுது
வானம் ஏன் மாறுது
போகத் துணையா வந்தாலே
நடுங்குற
காத்தும் சூடாகுது
காயம் பூவாகுது
நாளா அழகா செஞ்சாளே

அய்யயோ அம்மாடி, அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி, நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னாடி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people