சம்போ சிவ சம்போ பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Nadodigal (2009) (நாடோடிகள்)
Music
Sundar C Babu
Year
2009
Singers
Yugabharathi
Lyrics
Yugabharathi
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

நீயென்ன நானும் என்ன
பேதங்கள் தேவையில்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும்
நட்பென்றுத் தேங்கிடாதே
அழுகின்ற நேரம்கூட நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை……
துனிந்த பின்பு பயமே இல்லை…..
வெற்றியே….

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

ஓ…..

ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்
ஆசைக்கி வாழும் வாழ்க்கை ஆற்றிடைக் கோலமாகும்
பொய் வேடம் வாழ்வதில்லை
மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகும்
என்னாலும் வாழும் வாழும்
சாஸ்திரம் நட்புக்கில்லை….
ஆஸ்திரம் நட்புக்குண்டு…. காட்டவே…

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

எரியும் விழிகள் உறங்குவதென்ன
தெரியும் திசைகள் பொசும்புவதென்ன
முடியும் துயரம் திமிருவதென்ன
நெஞ்சில் அனல் என்ன
மறையும் பொழுது திரும்புவதென்ன
மனதை பயமும் நெருங்குவதென்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதிலென்ன

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.