அள்ளித்தரும் பிள்ளையாரை பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Tamil Devotional (2013) (பக்திப்பாடல்கள்)
Music
Randoms
Year
2013
Singers
Lyrics

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
 
ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்
தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்
ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்
தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்
 
பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்
பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்
ஆழிப் பை நாக பள்ளியானின் மூத்த மருமகன்
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
 
அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்
மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்
அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்
மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்
 
என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்
என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்
அரளி அருகம் புல்லில் எழுந்து நிற்ப்பவன்
 
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
 
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.