சகல கலாவல்லியே பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Tamil Devotional (2013) (பக்திப்பாடல்கள்)
Music
Randoms
Year
2013
Singers
Lyrics
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொல்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்
வட நூற்கடலும்
தேக்கும் செந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத்து இருந்தாய்
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்
எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பதால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

சொல்விற்பனமும் அவதானமும்
கவி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்
நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே சகல கலாவல்லியே

நான்முகன் நாயகியே
ஆயக்கலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.