Song lyrics

Kannakuzhikaaraa Lyrics

கன்னங்குழிக்காரா பாடல் வரிகள்

Last updated Nov 14, 2026

Music
Mysskin
Year
2026
Singers
Shruti Haasan
Lyricist
Kabilan

Lyrics

Kannakuzhikaaraa Lyrics

கன்னக்குழிக்காரா
முண்டக்கண்ணு வீரா
அட சாமி என்ன பாருடா
உசுரோட ஒடச்சி போடுடா

சாகசக் காரா மாமிசத் தேரா
நேருக்கு நேரா நில்லுடா திமிரா
சாகசக் காரா மாமிசத் தேரா
நேருக்கு நேரா நில்லுடா திமிரா

இத்தன காலம் எங்கடா போன
இப்படி வந்து கொல்லுறியே
எத்தன பேரு சுத்தியே வந்தான்
நெஞ்சுக்குள் யாரும் சிக்கலயே

தண்ணி குடிச்சா நீ விக்கி நிக்குற
தொண்டக் குழியில் சுகமா
கண்ணu முழிச்சா நீ கிட்ட நிக்குற
நெஞ்சு குழியில் முகமா
மீசைய பாத்து ஆசைய கோர்த்து
ஒத்தையில் நானும் நிக்கிறேனே

சாகசக் காரா மாமிசத் தேரா
நேருக்கு நேரா நில்லுடா திமிரா
கன்னக்குழிக்காரா
முண்டக்கண்ணு வீரா

இம்புட்டு ரோசம் ஆகாது உனக்கு
பக்கத்தில் வந்து மல்லுக்கட்டு
அம்புட்டு ஆச உன்மேல எனக்கு
தண்டோரா போட்டு தாலிக்கட்டு

பேச்சுவாக்குல கிச்சு கிச்சு மூட்டாத
வத்திக்குச்சியா எரிவேன்
மூச்சி காத்தாலா என்ன முட்டி தள்ளாத
கட்டி வெள்ளமா கரைவேன்
ஏக்கத்தில் விழுந்து எங்கெங்கோ அலைந்து
தூக்கத்தை தொலைச்சு நிக்கிறேனே

சாகசக் காரா மாமிசத் தேரா
நேருக்கு நேரா நில்லுடா திமிரா

கன்னக்குழிக்காரா
முண்டக்கண்ணு வீரா
அட சாமி என்ன பாருடா
உசுரோட ஒடச்சி போடுடா

சாகசக் காரா மாமிசத் தேரா
நேருக்கு நேரா நில்லுடா திமிரா
சாகசக் காரா மாமிசத் தேரா
நேருக்கு நேரா நில்லுடா திமிரா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people