பறவைகளே பறவைகளே பாடல் வரிகள்

Movie Name
Dharmam Thalai Kaakkum (1963) (தர்மம் தலை காக்கும்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க
குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க
இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க

பவளவாய்ப் பைங்கிளிகாள் எங்கே வந்தீங்க
என் பருவத்தோடு தோது பாக்க யாரு சொன்னாங்க ?
தவளைகளே தவளைகளே எங்கே வந்தீங்க
நான் தத்தி தத்தி நடப்பதையா ரசிக்க வந்தீங்க

பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க
குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க
இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க

மானினமே மானினமே எங்கே வந்தீங்க
இந்த மானும் உங்க ஜாதி என்றா மயங்கி விட்டீங்க ?
பூவினமே பூவினமே எப்போ வந்தீங்க
இந்த பூவை முகம் பார்ப்பதற்கா பூத்து வந்தீங்க

பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க
குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க
இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.