ஓ ஆயியே ஆயியே பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Ayan (2009) (அயன்)
Music
Harris Jayaraj
Year
2009
Singers
Benny Dayal, Chinmayi, Haricharan, Pa. Vijay
Lyrics
Pa. Vijay
ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

பெண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவும் நீ

(இசை...)

ஆண்: ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே
பெண்: ஒரு கையில் ஒரு கையில்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

ஆண்: இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்

ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

பெண்: நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவும் நீ

(இசை...)

பெண்: இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே

ஆண்: முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

பெண்: சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய் (ஓ... ஆயியே...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.