விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Ayan (2009) (அயன்)
Music
Harris Jayaraj
Year
2009
Singers
Karthik
Lyrics
Na. Muthukumar
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான்
என்னை கண்டேனே செந்தேனே...
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும் மௌனம்
பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே.
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் முள்தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
எதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
(விழி மூடி) 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.