Song lyrics

Thaen Thaen Thaen Lyrics

தேன் தேன் தேன் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vidyasagar
Year
2008
Singers
Udit Narayan, Shreya Ghoshal
Lyricist
Pa. Vijay
Thaen Thaen Thaen

Lyrics

Thaen Thaen Thaen Lyrics

பெண்: தேன் தேன் தேன்...
உன்னைத் தேடி அலைந்தேன்...
உயிர்த் தீயாய் அலைந்தேன்...
சிவந்தேன்...

ஆண்: தேன் தேன் தேன்...
என்னை நானும் மறந்தேன்...
உன்னைக் காண தயந்தேன்...
கரைந்தேன்...

பெண்: என்னவோ சொல்லத் துணிந்தேன்...
ஏதேதோ செய்யத் துணிந்தேன்...
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்.... (தேன் தேன்...)

(இசை...)

பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

பெண்: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்

பெண்: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்... (தேன் தேன்...)

(இசை)

ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

பெண்: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

பெண்: ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்... (தேன் தேன்...)
 

People

Related People

4 people