என்ன சொல்ல‌ பாடல் வரிகள்

Movie Name
Thanga Magan (2015) (2015) (தங்கமகன்)
Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Swetha Mohan
Lyrics
Dhanush
என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே!
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே!
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..!
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!

சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள..!

- Posted by Lingarasu Kittusamy

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.