திருடிய இதயத்தை பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Paarvai Ondre Podhume (2001) (பார்வை ஒன்றே போதுமே)
Music
Bharani
Year
2001
Singers
Harish Raghavendra, K. S. Chithra
Lyrics
Pa. Vijay
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா

கண்கள் மோதலா இது வந்த காதலா
நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசி தூரலா நீ பேசு காதலா
தவித்தேனே நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன்
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்
நானும் உன்னை சம்மதிக்கிறேன்
என்றே இங்கொரு வார்த்தை சொல்
மன்னவனே மன்னவனே
உயிரில் உயிராய் கலந்தவனே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா

நேற்று பொழுதில நான் கண்ட கனவுல
பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனே
இதயத்தோடு இதயம் சேர்த்து
ஒரு முறையாவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
ஒரு முறையாவது பார்த்துக்கொள்
காதலனே காதலனே
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.