Chapter 12

நடுவு நிலைமை

Natuvu Nilaimai

Impartiality

10 kurals

Kural 111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Equity is supreme virtue It is to give each man his due
Kural 112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
Wealth of the man of equity Grows and lasts to posterity
Kural 113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
Though profitable, turn away From unjust gains without delay
Kural 114 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
The worthy and the unworthy Are seen in their posterity
Kural 115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
Loss and gain by cause arise; Equal mind adorns the wise
Kural 116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
Of perdition let him be sure Who leaves justice to sinful lure
Kural 117 கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
The just reduced to poverty Is not held down by equity
Kural 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
Like balance holding equal scales A well poised mind is jewel of the wise
Kural 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
Justice is upright, unbending And free from crooked word-twisting
Kural 120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
A trader's trade prospers fairly When his dealings are neighbourly