Chapter 32

இன்னா செய்யாமை

Innaaseyyaamai

Not doing Evil

10 kurals

Kural 311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
The pure by faith mean pain to none Though princely wealth by that is won
Kural 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage
Kural 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat
Kural 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm
Kural 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
What does a man from wisdom gain If he pines not at other's pain?
Kural 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
What you feel as pain to yourself Do it not to the other-self
Kural 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
Any, anywhere injure not At any time even in thought
Kural 318 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
How can he injure other souls Who in his life injury feels
Kural 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.
Harm others in the forenoon Harm seeks thee in afternoon
Kural 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
No harm is done by peace-lovers For pains rebound on pain-givers