Chapter 34

நிலையாமை

Nilaiyaamai

Instability

10 kurals

Kural 331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
The worst of follies it is told The fleeting as lasting to hold
Kural 332 கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes
Kural 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
Wealth wanes away; but when it comes Take care to do enduring things
Kural 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
The showy day is but a saw Your life, know that, to file and gnaw
Kural 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes
Kural 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
One was yesterday; not today!
Kural 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
Man knows not his next moment On crores of things he is intent
Kural 338 குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
The soul from body any day Like bird from egg-shell flies away
Kural 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
Death is like a slumber deep And birth like waking from that sleep
Kural 340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
The life berthed in this body shows A fixed home it never knows