ஹேய் கதிரிங்கே எழுந்தது பாடல் வரிகள்

Movie Name
Makkal Aanaiyittal (1988) (மக்கள் ஆணையிட்டால்)
Music
S. A. Rajkumar
Year
1988
Singers
S. P. Balasubramaniam
Lyrics
S. A. Rajkumar
ஹேய் கதிரிங்கே எழுந்தது
பனியின்று மறைந்தது
உலகங்கள் விழித்தது வா வா வா

இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...

புனிதர்கள் பிறந்த மண் வணிகர்கள் பையிலே
பதவிகள் கிடைத்தது திருடர்கள் கையிலே
ஏழை உயர்வுக்கு வாளை எடுத்தவன்
நாளை குறிக்கிறேன் நானும் ஜெயிப்பவன்

ஏன் மனிதனே பதுங்க நினைக்கிறாய்
நான் நான் நான் நான் ஆளப்பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...

முதுகினை கேள்வியாய் வளைத்தவன் மூடனா
உயர்த்திய ஏணியை உதைத்தவன் வேந்தனா
இனியும் ஒரு முறை தவணை உனக்கில்லை
இன்றே கிழிக்கிறேன் முகத்தின் திரைகளை
ஓராணைதான் கதையும் முடிந்திடும்
நான் யார் யாரென உனக்கு புரிந்திடும்

இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்
நடப்பவை தெரிந்தவன்தான்
நினைத்ததை முடிப்பவன்தான்
புயலென வருபவன் புரிந்துக் கொள்
புலிக்கு பிறந்தவன்

இது எந்தன் ராஜ்ஜியம்தான்
எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.