ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக பாடல் வரிகள்

Movie Name
Makkal Aanaiyittal (1988) (மக்கள் ஆணையிட்டால்)
Music
S. A. Rajkumar
Year
1988
Singers
K. J. Jesudass
Lyrics
S. A. Rajkumar
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்
ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியத்தானே சுமந்தேன்
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்....

பஞ்சு பொதி பக்கத்தில தீயும் இருக்கு அது
பத்தவில்ல பாசமென்னும் ஈரம் இருக்கு
நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசமிருக்கு
என்ன வஞ்சமுன்னு தள்ள என்ன ஞாயமிருக்கு

வரி போடாத அரசாங்கமில்ல
பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல
வரி போடாத அரசாங்கமில்ல
பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல

கண்ணுக்குள்ள சுமந்தேன்
ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்
ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன்

புட்டுக்காக பரமேசன் மண்ணு சுமந்தான்
இயேசு தத்துவத்த காப்பாத்த சிலுவை சுமந்தான்
பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள்
நான் பட்ட கடன் தீரவில்லை உன்ன சுமந்தேன்

என் தேகம் எனக்கு பாரமில்ல
உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல
என் தேகம் எனக்கு பாரமில்ல
உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல
துன்பத்துக்கும் சிரிச்சேன் அடி
அன்புக்குத்தான் அழுதேன்

ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்
ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியத்தானே சுமந்தேன்
ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.