நான் கும்பகோணம் நீ பாடல் வரிகள்

Movie Name
Makkal Aanaiyittal (1988) (மக்கள் ஆணையிட்டால்)
Music
S. A. Rajkumar
Year
1988
Singers
S. P. Sailaja
Lyrics
S. A. Rajkumar
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்
ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு
ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு

நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

கோலாரு தங்க வயலு கோஹினூர் வண்ண மயிலு
பாலாத்து பறவ மீனு ஏற்காட்டு தாமர தேனு
உனக்காக காத்திருக்கு வாவா ராஜா பொழுதாச்சு
ஒடம்பெல்லாம் நோவெடுத்து ரோஜா செண்டு பாழாச்சு

வா மச்சான் என் பக்கம் வா மச்சான் என் பக்கம்
வயசும் மனசும் தனியா தவிக்குது
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்..

தரை மேலே பறக்கும் தேர வடம் போட்டு இழுத்துப் பாரு
அரங்கேறி ஆடும் நிலவ அழகா அணைச்சு பாரு
மழை பேயா ஊருக்குள்ளே அழையா வீட்டு விருந்தாளி
வெறுங்கையா போகாதய்யா வெலைய கொடுத்த ராஜாளி

ஆராய்ச்சி ஏன் இப்போ ஆராய்ச்சி ஏன் இப்போ
அதுக்கும் இதுக்கும் கணக்கு இருக்கு
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு
ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு
நான் கும்பகோணம் நீ மாதவரம்
நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.